புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Saturday, June 30, 2012

கணித்தான் பூங்குன்றன்


வாசலில் எனக்கு
சார் சொல்லி
வணக்கம் வைக்கும்
செக்யூரிட்டியும்

ஏசி அறையில்
நான் பெயர் சொல்லி
கை குலுக்கும்
மேலதிகாரியும்

என்னைவிட‌
ப‌த்துவ‌ய‌து மூத்த‌வ‌ர்க‌ள்.


சிறியோரை இகழ்தலும் இலமே
பெரியோரை வியத்தல் அதனினும் இலமே.

- ஞானசேகர்

No comments: