கடவுளைப் பேட்டி கண்டு, இவற்றைப்பற்றி என்ன நினைக்கிறார் எனக் கேட்டால்? ஒரு கற்பனைதான்.
புனித நூல்
என்னைக்
கதாநாயகன் ஆக்கிக்கொண்ட
சில கற்பனைக் கதைகளின் தொகுப்பு.
விற்பனையைக் கூட்ட
சில ஆபாசங்களும் உண்டு.
அதிக பிரதிகள் உண்டு.
தயவுசெய்து எரிக்காதீர்கள்!
கோயில்
எனக்கு
மனிதர்கள் தந்த புகலிடம்.
ஆறாம் அறிவின் புதைவிடம்.
அவரவர் கற்பனைக்கேற்றபடி
ஒவ்வொரு வரலாறு!
எனக்கு போட்டியாய்
சினிமாக்காரர்கள்!
சாமியார்
போலிகளைக் கண்டு
ஏமாற வேண்டாம்.
எனக்கு வேறெங்கும்
கிளைகள் இல்லை.
உடைமைகளுக்கும்,
கற்புக்கும்
நான் பொறுப்பல்ல!
மெழுகுவர்த்தி
ரகசியங்கள்
என் மெய்க்காப்பாளர்கள்.
இருள் இருக்கும்
மட்டும்தான் மதிப்பு.
விட்டில் பூச்சிகள் மனிதர்கள்!
ஊதுபத்தி
மறுமையின் கருமை
விலகும் என நம்பி,
இம்மையில்
வாசனையில் மயங்கி,
சாம்பலாவது தெரியாமல்
வரம்கேட்டு ஒற்றைக்காலில்
நிற்கிறான் மனிதன்!
உண்டியல்
சுயநலப் பாத்திரம்
பொதுநலம் என்ற பெயரில்
சுயநலத்தின் எச்சத்தால்
நிரப்பப்படுகிறது!
தயவுசெய்து தமிழர்கள்
சரியாகப் படிக்கவும்
இதன்மேலுள்ள
ஆங்கில வார்த்தையை!
மொட்டை
பொடுகு தலையனின்
கடைசி மருத்துவம்.
இறந்த செல்கள் மேல்
மனிதன் கொண்ட
மகத்தான நம்பிக்கை.
மூடநம்பிக்கைகளின்
உச்சிக்கட்டம்.
எனது அடுத்தக் குறி
புருவ முடிகள்!
காதல்
நான் (கடவுள்),
நான்ன்ன்ன்ன்ன (அதிகாரம்),
நாகரீகம்,
அணுசக்தி,
ஆணுறை
மனிதன் தவறாகப் புரிந்துகொண்ட
இந்தப் பட்டியலில்
இப்போது காதலும்!
சொர்க்கம்
பார் நடனங்கள்
தடை செய்யப்படாத இடம்!
மரணம்
(தாமதிக்கும் நீதி-அநீதி)
நீதி தவறாத
விசாரணை கமிஷன்!
-ஞானசேகர்
(கடவுள், உங்கள் ஒவ்வொருவரைப் போலவும்)
3 comments:
முதல் முறை இங்கே ப்ரியனின் பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டம் மூலம் வருகை..
உங்கள் சமீபத்திய பதிவைக்கண்டது.. அட மற்றுமொரு காதல் கவிதைப்பினாத்தல் என்று தோன்றியது.. இந்த பதிவைப்பார்க்கும் வரை...
அருமை..
-
செந்தில்/Senthil
தமிழ்மணத்தில் பதியலாமே உங்கள் பதிவை....
http://thamizmanam.com/tamilblogs/index.php
-
செந்தில்/Senthil
முன்னாலேயே இங்க வந்துருக்கேன்.. படிச்சிருக்கேன்..
அருமை..
இன்னைக்கு உங்களையும் நேர்ல பாத்து, 'நிர்வாணத்த' பத்தியும் பேசினதுனால.. அட்டென்டென்ஸ் போட்டிருக்கேன் .. :)
Post a Comment