முனியாண்டி விலாஸைப்
போன்றதுதான் இந்தியாவும்
முனியாண்டி எவரென்பதும்
இந்தியா எதுவென்பதும்
யாருக்கும் தெரியாது.
- யுகபாரதி (தெப்பக்கட்டை நூலிலிருந்து)
அலறும் அலைபேசியை
அவசரமாக அடக்கி
அழப்போகும் குழந்தையை
அதட்டி வாய்மூடி
ஒட்டிவந்த காதலைத்
தட்டி உதறிவிட்டு
ஒத்திசைக்காத அடுத்தவனை
அஃறிணை வசைசெய்து
இருட்டறையில் அனிச்சையாய்
விறைத்து நிற்கும் நமக்கெல்லாம்
தேசபக்தியை நிரூபிக்க
ஒரு சந்தர்ப்பம்!
சிரமசைத்து
கரமாட்டி
கண்மூடி
அமர்ந்து
நடந்து
பாடி
இசைத்து
நகைத்து
திரை நிழலாடுபவர்க்கெல்லாம்
தொழில் நிமித்தம்
ஒரு சந்திப்பு!
- ஞானசேகர்
2 comments:
யுகபாரதியோடதும் உங்களோடதும் செம்ம மேட்ச்... வடிவம் நல்லா வந்துருக்கு...
நல்லா இருக்கு !!
ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/
Post a Comment