புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, February 08, 2006

ஏதேனும் ஒன்றனுக்கு விடையளி

இருக்கா?
இல்லையா?

உண்மையா?
பொய்யா?

நம்புவதா?
வேண்டாமா?

இடப்பக்கமா?
வலப்பக்கமா?

மேலே வைக்குமா?
கீழே தள்ளுமா?

143ஆ?
144ஆ?

ஏகாதிபத்தியமா?
கம்யூனிஸமா?

மதி வளர்ப்பதா?
மதி குறைப்பதா?

ஒன்று போதுமா?
உபரி தேவையா?

வரம் தருமா?
சாபமிடுமா?

இலவசமா?
கூலி தேவையா?

இடிப்பதா?
கட்டுவதா?

ஒருமுறை போதுமா?
பலமுறை வேண்டுமா?

சுற்றம் காக்குமா?
முற்றும் போக்குமா?

தலைமுடி காக்குமா?
முகமுடி தருமா?

பிழைத்திருத்தமா?
பிழை திருத்துமா?

முடிவுண்டா?
முடி உண்டா?

வரலாறு சொல்லவா?
எதிர்காலம் கேட்கவா?

ரகசியம் சொல்லவா?
அம்பலம் ஆக்கவா?

முத்தம் செய்யவா?
அலகு குத்தவா?

தொடலாமா?
கூடாதா?

மதம் பார்க்குமா?
சாதி பார்க்குமா?

பட்டினி போடுமா?
வயிறு நிரப்புமா?

கேட்டால் தருமா?
தட்டினால் திறக்குமா?
தேடினால் கிடைக்குமா?

.....
.....
.....
இன்னும்
பதிலேயில்லை
பல கேள்விகளுக்கு.....
இருந்தும்
தொடர்கின்றன.....
பல கடவுள்களும்,
சில காதல்களும்.....

-ஞானசேகர்

5 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

something as usual...

J S Gnanasekar said...

அய்யோ, சேரன் தொல்லை தாங்கமுடியல. ஒவ்வொரு தடவையும் அவன் சொல்றதுக்கு அர்த்தம் கேக்குறதே எனக்கு வேலையாப் போச்சு.

//Something as usual//

அப்புடின்னா நான் என்னான்னு எடுத்துக்கிறது?

//பயன்படுத்தும் வார்த்தைகளில் இன்னும் கொஞ்சம் கவனம் தேவை//ன்னு எடுத்துக்கிறதா? இல்லை //பொறாமை என்ற வார்த்தைக்குப் பொருள் புரிந்தது//ன்னு எடுத்துக்கிறதா? இல்லை //சேகர் நீயா இப்படி?//ன்னு எடுத்துக்கிறதா?

இதுக்குக் கல்வெட்டே பரவாயில்லை.

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

nothing unusual

J S Gnanasekar said...

It is usual for nothings to fight for something that is unusual.

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

Of course, This is usual...