புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, May 11, 2009

முதல்காலை


எல்லா பெண்களை போலவே அவளும் இனி தன் உடல் தன்னுடையதில்லை என்று ஒத்துக் கொண்டவளை போல அவன் இச்சையின் போக்கில் தன்னை ஒப்படைத்துக் கொள்ள துவங்கினாள்.
- எஸ்.ராமகிருஷ்ணன்நேற்று வாங்கிய
முதல் எழுத்தைக்
கிடைக்கும் பொருளெல்லாம்
கிறுக்கிப் பார்க்கிறாள்
பெயர் மட்டும்
எழுதத் தெரிந்தவள்.

சீரா கேட்டிக சீருன்னு
ஆயி அப்பன்மேல
சீறு சீறுன்னு சீறுறான்
இராவோடு rawவா
முதல் எழுத்தறிவித்தவன்.

- ஞானசேகர்

5 comments:

சேரல் said...

நல்ல கவிதை டா நண்பா!

எழுத்துப்பிழை இருக்கிற மாதிரி தெரியுதே. மன்னிச்சுக்கோ. பிழை திருத்தறவன் கண் மாதிரி என் கண்ணுக்கு முதல்ல படறது அதுதான். நான் என்ன செய்ய?

-ப்ரியமுடன்
சேரல்

ச.பிரேம்குமார் said...

முதலில் சற்று புரியவில்லை... பின் மெல்ல மெல்ல விளங்கிற்று :-))))

J.S.ஞானசேகர் said...

சேரல்,

Net centre மூடப்படும் அவசரத்தில் விக்கிறதுகுப் பதிலாக றிச்சுட்டேன்.

- ஞானசேகர்

நட்புடன் ஜமால் said...

செம சீறல் அதுவும் இராவோடு rawவாக

Krishna Prabhu said...

நீங்கள் எழுதிய யூதர்கள் புத்தகம் பற்றி படித்தேன். நீண்ட நாட்களாக என்னுடைய புத்தக அலமாரியில் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்களில் அதுவும் ஒன்று.