புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Monday, August 03, 2009

பெய்யெனப் பெய்யாத மழை

கடிதம் போட்டு
திருடன் வந்தான்
அனுப்புநர்: மாப்பிள்ளை.
- யாரோ

கோட்டு போட்ட மாப்பிள்ளைக்கு
ரேட்டு கொஞ்சம் சாஸ்தியின்னா
இதுக்குப் பேரு என்ன?
ஆண் விபச்சாரம்.
- ABCD திரைப்படத்தில் பாரதியின் அறிமுகப் பாடல்


சொர்க்கத்தின் மனுமகன்
தொழுகிறாள்
ரொக்கத்தின் மணமகன்
தழுவாதவள்.

- ஞானசேகர்

5 comments:

நட்புடன் ஜமால் said...

யாரோ கவிதை அருமை.

------------------

உங்கள் வரிகள்

முதிர் கண்னி என்ற அர்த்தம் போல் எனக்கு விளங்குது - வரதட்ச்சனை பிரச்சனையால்.

[[சொர்க்கத்தின் மனுமகன்
தொழுகிறாள்]]

இது இன்னும் சரியாக விளங்கல

ஒரு வேலை மனுமகள் என்ற பதம் உண்டோ ...

சேரல் said...

Nice

-priyamudan
sEral

Bee'morgan said...

முதல் தடவை படித்ததில் சுத்தமா புரியல..
இன்னும் பல முறை படிக்கனுமோ..?

J.S.ஞானசேகர் said...

வறுமையின் பயத்தில் பெற்றோர்களின் கட்டாயத்தால் துறவியாகும் ஒரு பதினைந்து வயது சிறுமியின் பாதிப்பில் எழுதப்பட்ட வரிகள் இவை.

பெய்யின்னு சொல்லு, மழை பெய்யும்னாரு வள்ளுவர். அதைக் கொஞ்சம் திருப்பி, மழையெல்லாம் தான்சொல்லிப் பெய்வதாக நினைக்கும் அச்சிறுமிக்காக எழுதிய சிக்கன வரிகள்.

- ஞானசேகர்

Bee'morgan said...

ஆகா... இப்போதுதான் விளங்குகிறது..
நன்று.. நீங்கள் விளக்கம் சொல்லியிரா விட்டால் நிச்சயமாய் எனக்குப் புரிந்திருக்காது..

ஒத்த அலைவரிசையில் சேரலுக்கு மட்டுமே புரிந்திருக்கிறது என நினைக்கிறேன்..

ஒரு சின்ன சந்தேகம்..
இவ்வளவு சுருக்கம் தேவையா?