வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில்நீ சுமந்ததில்ல
வயித்தில்நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு
- வைரமுத்து
தூக்கத்திலேயே
குதிரை ஓட்டினாலும்
பாட்டி கூப்பிட முடியாததால்
அலெக்ஸாண்டர் ஆகவில்லை
நாட்டுச் சரக்கே
நயமென்று
தாத்தா சொல்ல
நெப்போலியன் ஆகவில்லை
குருமடத்தில் இருந்து
ஓடிப் போனதால்
பாதிரியார் சொல்லி
ஸ்டாலின் ஆகவில்லை
ஏற்கனவே ஊருக்குள்
ஒரு செல்வம்
மூக்கு ஒழுகத் திரிந்ததால்
தமிழ்ச்செல்வன் ஆகவில்லை
லெனின் ஆவது பற்றி
யாருமே பரிசீலிக்கவில்லை
அதனால்
சார்லஸ் ஆகவில்லை
இதனால்
ஜேம்ஸ் ஆகவில்லை
எதனாலோ
எட்வர்ட் ஆகவில்லை
ஊருக்குள் முதல்
சேகர் ஆகிப்போனேன்
சேகர் ஆனபின்
ஊருக்குள் யாருமே
சேகர் ஆகவில்லை.
- ஞானசேகர்
3 comments:
ஹாஹாஹாஹாஹா
வேற எவனும் சேகர் ஆகிற முடியுமா என்ன?
ஜாஹிருதீன் முகமது என்ற அரேபிய இயற்பெயரைக் கூப்பிட நாக்கு தடுமாறுவதால், உள்ளூர் மக்கள் அந்த வருங்காலப் பேரரசருக்கு வைத்த செல்லப் பெயர் தான் பாபர்.
- ஞானசேகர்
ஞானம் கூட சேர மறுப்பதாலோ என்னவோ.
Post a Comment