புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Tuesday, December 13, 2005

110 கோடி முகமுடையாள்

('முதல் மற்றும் கடைசி வரிகள் 'விதை' என்ற வார்த்தையைக் கொண்டிருக்க வேண்டும்' என்ற கட்டுப்பாட்டுடன் எங்கள் கல்லூரிக் கவிதைப் போட்டியில் நான் எழுதிய கவிதை இது, கொஞ்சம் திருத்தங்களுடன்)

விதைக்க இடம் வாங்கி
இடமே அவனது என்றான்
குத்தகைகாரன்.

குத்தகை நீக்கி
உரிமை மீட்க
மக்களை அனுப்பினால்
என் மார் முட்டி
தலை பாதி
வெட்டிப்போனது ஒன்று;
இடது கை
வெட்டிப் போனது இன்னொன்று.
கூத்தாடி துண்டுபட்டான்
ஊருக்குக் கொண்டாட்டம்!

இருக்கும் மக்கள்
என்னுயிர் எடுப்பதற்குள்
சொத்தைப் பிரித்து
சமரசம் செய்தேன்.

சொத்தின் அளவை
வாயின் அளவே
தீர்மானித்துப் போனது.

இப்போது....

இடது கை
எடுத்துப் போனவன்
தாய்நாடி வருகிறான்.

தலை பாதி
எடுத்தவனின் அடுத்தவன்
தாய்விட்டுப் போகப்பார்கிறான்.

என் இதயத்தில் இடி,
வயிற்றில் விஷவாயு,
வலதுகையில் தீப்பந்தம்,
இடதுகையில் தொழு,
காலில் பித்தவெடிப்பு.

என் கண்ணீர் பசையில்
நனைந்தது வங்கக்கடல்.
என் பாதத்தை விசையில்
கரைத்தது வங்கக்கடல்.

ஐய்யகோ.....

மக்களைப் பிரித்து
மாதவறு செய்தேன்
மரிக்கும் வரையில்
மனம் நொந்து போவேன்.

மக்களைக் கூட்டி
சமரசம் செய்ய
மன்றம் போனால்
உச்சந்தலையில்
விதைக்கிறான் குண்டுகள்!

-ஞானசேகர்

4 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சேகர்.....நீயா இப்படி.....???


(தலைப்பு நன்றாகவே இருக்கிறது)

J S Gnanasekar said...

சேரா, உன்னிடம் பாராட்டு வாங்கிவிட்டேன். ஏதோ சாதிச்சது மாதிரி இருக்கு.

உவப்ப தலைகூடி மட்டும்தான் இருந்தோம் என நினைத்தேன். உள்ளப் பிரிந்திருக்கிறோம் என உணர்த்திவிட்டாய். (என்ன மட்டும் கொழப்புறியில்ல...)

-ஞானசேகர்

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சரியா....தவறா...
என்று சொல்லமுடியாத ஒன்றைப் பற்றிய
சரியான இரண்டும்....
தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டன...

றெனிநிமல் said...

நன்றாக உள்ளது.