புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, April 15, 2009

MH - 06

முப்பத்தி மூன்றுகூட
பெற முடியாத
நூற்றுக்கு நூறு
மதிப்'பெண்'.
- யாரோ


மேல்மூடி இருக்கும்; வெண்மைக் குயிர்தரும்
திரவம் சுமக்கும்; அழுது புறந்தள்ளும்;
கத்திப்பதம் காணும்; நெஞ்சில் சுமக்கும்
ஆங்கிலப் பென்னன்ன பருவப்பெண்.

- ஞானசேகர்

5 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

நல்ல சிலேடை. ஆனால் தலைப்பு தான் எப்படி பொருந்துகிறது என்று தோன்ற வில்லை. வழக்கம் போல் உன் பாணியில் அமைந்திருக்கிறது. இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

J S Gnanasekar said...

தலைப்பு தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்ததால் வந்த குழப்பம் இது. அது கொஞ்சம் கடினமான தலைப்புதான்.

தலைப்பை மாற்றிவிட்டேன், அணியை மாற்றாமல். (மீண்டும் சிலேடை)

- ஞானசேகர்

Unknown said...

தழல்வீரம் நன்றாக இருக்கிறது சேகர்.

நல்ல முயற்சி

ஆ.ஞானசேகரன் said...

யாரப்பா ..

என் பெயரும் ஞானசேகரன்....

ச.பிரேம்குமார் said...

அட! என்ன ஒரு ஒப்பீடு? :-)
அருமை தோழரே