புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Wednesday, October 12, 2005

சரியான தவறுகள்

உங்கள் தலைமுடிமீதுகூட உங்களுக்கு உரிமை இல்லை.
-இயேசு கிறிஸ்து


அம்மாவின் கல்யாணப் புடவையில்
ஆதாமின் ஆப்பிளைக் கட்டி
கண்களை இறுகமூடி
வார்த்தைகள் கவனிக்காமல்
ஏதோ முனகிவிட்டு
உத்திரம் இருக்கும் உத்திரவாதத்தில்
நாற்காலிக்குக்கூட
சுமையாக இருக்க விரும்பாமல்
அதைவிட்டு விலக.....
துள்ளிக் குதித்தேன்
சந்தோஷமா?
யோசிக்க நேரமில்லை..

ஏதோ பார்க்க நினைத்தேன்.
கண்களுக்கு அனுமதி தந்த இமைகள்
பார்வைக்குத் தரவில்லை!
ஏதோ பேச நினைத்தேன்.
நாக்குக்கு அனுமதி தந்த உதடுகள்
வார்த்தைக்குத் தரவில்லை!
நான் செய்வது சரிதானா?
யோசிக்க நினைத்தேன்.
மூளைக்கு அனுமதி தந்த உடம்பு
கழுத்தருகே ஒடிந்துபோன
முதுகெலும்புக்குத் தரவில்லை!

இக்கணம் நான்
பூமிமீதும் இல்லை!
ஆகாயத்திலும் இல்லை!
இரண்யகசிபு போல....
இயேசுநாதர் போல....
இப்படித்தான் நானும்
செத்துப் போனேன்!
-ஞானசேகர்

1 comment:

காட்டாறு said...

ஞானசேகர், உங்கள் பகுதிகள் அனைத்தும் அருமையாக இருந்தன. அதிலும் சுக பிரசவம் பெற நீங்கள் பட்ட கஷ்டங்களும் உணர முடிந்தது. எழுதுவதை நிறுத்தி விட்டீர்களா? மீண்டும் எழுந்தருள்க. அன்புடன் வரவேற்கும் காட்டாறு.