புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Sunday, October 30, 2005

தலைப்பில்லாமல்

உங்களில் தவறு செய்யாதவன் முதலில் கல்லெறியட்டும்.
-இயேசு கிறிஸ்து


குழந்தைகள் பசியாற
பயங்காட்டும் வேடங்களில்,
ஆண்மை தொலைத்தவனின்
அராஜக அடக்குமுறைகளில்,
பெண்பித்தன் பதிக்கும்
சொல்லமுடியா காயங்களில்,
பருவம் திறக்கப்படாதவர்கள் செய்யும்
பருவம் மீறிய பரீட்சைகளில்,
பிரம்மச்சாரிகள் சிலரின்
பிரம்மாஸ்திர சோதனைகளில்,
சலித்துப்போன சம்சாரிகளின்
மாற்றம் தேடும் தேடுதல்களில்,

ஆட்டுச் சந்தை நடக்கும் உடைந்த
பிள்ளையார் கோயில் சந்துகளில்,
உடையின் உபயோகம் அறியாமல்,
கெடுக்கப்படும் கொடுமை அறியாமல்,
சுத்தம் சுற்றம் ஏதும் அறியாமல்,
"கொழந்தயக் குடு" என்பது தவிர
வேறு வார்த்தை தெரியாமல்
உடைந்த பிள்ளையார் சிலையுடன்
ஒவ்வொரு நாகரீக ஊரிலும்
வாழ்ந்து வருகிறாள் ஒருத்தி!
-ஞானசேகர்

3 comments:

வெளிகண்ட நாதர் said...

இது போன்ற நிஜங்களை நான் நிறைய பார்த்து இருக்கிறேன்.
வாழ்த்துக்கள்! நல்லதொரு கவிதை

packia said...

wow, nice, Keep it up

றெனிநிமல் said...

அசத்தி விட்டீர்கள்.
நன்றி