புத்தகங்கள் பற்றிய பார்வைகளைப் பதியும் எங்கள் வலைப்பூ - http://puththakam.wordpress.com/

Friday, October 28, 2005

நிழல் சொல்லும் நிஜங்கள்


சிலிர்த்த சில முடிகள்,
சிமிட்டிய இரு கண்கள்,
எடுப்பற்ற வண்ணப் பின்னணி,
குறைபட்ட ஆடை அலங்காரம்,
பிடித்தவரின் தூரம்,
பிடிக்காதவரின் அருகாமை,
உதடு சொல்லாத சிரிப்பு,
அழகு குறைக்கும் அழுகை,
ஆயுள் குறையும் பயம்,
தொழில்நுட்பக் குறைபாடு
இவற்றுடன் பதிவு செய்யப்படுவதால்
எப்போதும் எடுக்கப்படுவதில்லை
நான் விரும்பியபடி
என்னுடைய புகைப்படம்!
-ஞானசேகர்

2 comments:

ப்ரியன் said...

மிக அருமை யதாரத்தமான சொற்கள் ஆழமான பின் கருத்து மிக அருமை ஞானசேகர் வாழ்த்துக்கள்

Geetha said...

Very Nice